×

"அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல்"  - முதல்வர் ஸ்டாலின் 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டனர். அத்துடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். திருவள்ளுவர் சிலையை மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். 


இந்நிலையில் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் துவக்கிவைத்திருக்கிறார். உலகளவில் இந்தியாவின் மதிப்பு வானளாவிய உயர்வை அடைந்திருக்கிறது. பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இந்தியாவின் பிரதமர் என்ற உயரிய பொறுப்பில் உள்ளவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருப்பது உங்களுக்கு கிடைத்துள்ள பெருமை. உங்களின் எதிர்கால சந்ததியினருக்கு இதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். பட்டத்துடன் படிப்பு முடிந்துவிடுவதில்லை.

பட்டங்கள் வேலைவாய்ப்புக்கானதல்ல; அறிவாற்றலை மேம்படுத்துவதற்கானது. சாதி, மதம், பதவி, அனுபவம் ஆகிய அனைத்தின் தன்மையும் வேறுபடும்;அறிவு மட்டுமே ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கப்படுகிறது. அறிவாற்றால் தான் அனைத்திலும் வலிமையானது. கல்விதான் யாராலும் திருடமுடியாத பறிக்க முடியாத சொத்து . தமிழ்நாடு உயர்கல்வியில் சிறப்பாக உள்ளது.அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை ஆகும் என்றார் .  இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக்தின் பட்டமளிப்பு விழாவில் , சிறந்து விளங்கிய 69 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கினார் பிரதமர் மோடி.


முன்னதாக பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் | அதிகம். கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில்,நுழைவுத் தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதனால் 25,000 ஆக இருந்த - கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை 77,000 ஆக உயர்ந்தது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 7.5% இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு பிரதமர்
மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.