×

“அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை” – அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க தேவையில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்விக் கட்டணம் உயருவதோடு இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் சூரப்பா பதவி விலக வேண்டும் என திமுக இளைஞரணி போராட்டம் நடத்தியது. தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக
 

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க தேவையில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்விக் கட்டணம் உயருவதோடு இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் சூரப்பா பதவி விலக வேண்டும் என திமுக இளைஞரணி போராட்டம் நடத்தியது. தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவு செய்திருப்பதாகவும் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்றும் இந்த பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே அரசு சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என அரசு முடிவெடுத்திருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார்.