×

“அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

 

என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை கண்டித்து பாளையங்கோட்டை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில்  திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவல்துறை கைது செய்ய முயன்ற போது மயக்கம் வருவதாக கூறி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி புறப்பட்டார். இருப்பினும் திமுக MLA மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான். அந்த DSP-யை பகிரங்கமாக கவர்னரிடம் சொல்லுவேன். தவெக அரசு திமுகவை மிரட்டிவிடலாம் என்று நினைக்கிறது. ஆனால் எந்த சூழலிலும் திமுகவை மிரட்ட முடியாது. எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும், திமுகவினர் அதனை எதிர்கொண்டு முறியடிப்பார்கள்.  ஆதவ் அர்ஜுனா முட்டாள் முதலமைச்சர் என பேசினார்.. நாங்கள் அவர்களை கைது செய்தோமா..? அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்.ஒரு MLA-வ பார்க்க விடமாட்றாங்க; எந்த முன்னறிவிப்பும் இன்றி MLA-வை தீவிரவாதி போல கைது பண்ணியிருக்காங்க; அராஜகம் செய்கிறார்கள்” என்றார்.