×

“எந்த கொம்பனாலும் என்னை தொட்டு அசைத்து பார்க்க முடியாது”- அனிதா ராதாகிருஷ்ணன் 

 

விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோ என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடியான 90 நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் எஸ்பி அலுவலகத்தில் 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த செல்லும்முன் செய்தியாளர்களை நோக்கி பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம். எந்த நெருக்கடிக்கும் அஞ்சமாட்டோம். எந்த கொம்பனாலும் என்னை தொட்டு அசைத்து பார்க்க முடியாது. என்னை ராஜினாமா செய்ய வைக்கமுடியாது. எவ்ளோ பணம் வேணாலும் வாங்கிக்கோங்க… எம்எல்ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு தவெகவில் இணைய சொல்லி வற்புறுத்துகிறார்கள்… அன்றும் இன்றும் என்றும் திமுகவில் தான் இருப்பேன்.. என்னை யாரும் அடக்கமுடியாது, காவல்துறையினர் அராஜகம் செய்கின்றனர்” என்றார்.