×

"விரைவில் ஆட்சி கவிழும்" - அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் பரபரப்பு

 

 

மொத்தமாக தவெக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் கிளர்ந்து எழுவார்கள் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தூத்துக்குடியில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முதலமைச்சர் ஆட்சி செய்யவில்லை. மக்களை ஏமாற்றுவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதைமட்டும் தான் செய்கிறார்கள்.. இப்படி ஒரு முதலமைச்சர் தேவையா? என மக்கள் கேட்கின்றனர். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது முதலமைச்சருக்கே நம்பிக்கை இல்லை, அதனால் தான் இந்த குதிரை பேரம் என்று மிரட்டல்கள் ஏற்படுத்தினால் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என முதல்வர் நினைக்கிறார். ஆனாலும் மொத்தமாக தவெக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் கிளர்ந்து எழுவார்கள். ஒருநாள் அவர்கள் அனைவரும் விலகுவார்கள். இந்த ஆட்சி கவிழும்” என்றார்.