×

திமுக அரசை புகழ்ந்து தள்ளிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!

 

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மனிதவளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லோகேஷ் நாரா, மாநிலங்களுக்கு இடையேயான முதலீட்டுப் போட்டி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அரசியல் களம் எவ்வளவு கடுமையானது.  முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் ஆந்திரா கடுமையாகப் போட்டியிட்டது. சில முதலீடுகளை நாங்கள் வென்றோம். சிலவற்றை இழந்தோம்.

முந்தைய திமுக அரசின் முதலீட்டு நடைமுறைகளின் நேர்மை குறித்து அவர் தெரிவிக்கையில்,  "முந்தைய தமிழக அரசு லஞ்சம்  கேட்பதாக எந்தவொரு முதலீட்டாளரும் புகார் கூறி நான் கேட்டதில்லை. பாராட்டுக்குரியவைகளை பாராட்டியாக வேண்டும். மிகவும் தூய்மையான, தொழில்முறை சார்ந்த முதலீட்டு நடைமுறையைப் பின்பற்றியது. அது மிகவும் பாராட்டத்தக்கது  என்றும் தெரிவித்தார்.

எந்த முதலீட்டாளரும் திமுக அரசு லஞ்சம் கேட்டதாகத் தன்னிடம் கூறியதில்லை என்றும், முதலீடுகளை ஈர்க்க திமுகவுடன் தாங்கள் கடுமையாகப் போட்டியிட்டு சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.