×

ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு 4ஆவது முறையாக ஆந்திரா முதலமைச்சராக பதவியேற்றார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.இதையடுத்து  சந்திரபாபு நாயுடுவுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்  பிரதமர் மோடி. ஆந்திர முதலமைச்சராக  சந்திரபாபு பதவியேற்கும் விழாவில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திரைபிரபலன்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலைய்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.