×

ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி வருகை

 

தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி வருகை தந்தார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக தான் தான் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் என்றும், என் மூச்சு உள்ளவரை நானே பதவி வகிப்பேன் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் தொடர்ச்சியாக  பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி அறிவிப்பு  வெளியிட்டார் ராமதாஸ்.  


ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு எழுந்த நிலையில், இரண்டாவது முறையாக தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி சென்றுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மயிலாதுறை சென்றுள்ள நிலையில் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அன்புமணி வருகை தந்தார். அம்மா சரஸ்வதி அவர்களை சந்திக்க அன்புமணி தைலாபுரம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.