×

விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணி ராமதாஸ்!

 

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொள்ள இருந்த பயண தேதியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்றிக் கொண்டார். 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 27ம் தேதி கரூரில் நடைபயண, பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். அதே தேதியில் தவெக தலைவர் விஜய்யும் அங்கு பிரச்சாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். இந்த தேதியில் அன்புமணிக்கு அனுமதி கொடுத்ததால், விஜய்க்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தனது பயணத்தை அன்புமணிக்கு 28ம் தேதி மாற்றி விஜய்க்கு உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமனி பயணத்தை சுட்டிகாட்டி விஜய் பிரச்சாரத்திற்கு 27 ஆம் தேதி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தற்போது அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.