×

100 நாட்களுக்கான நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி!

 

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவரது பிறந்த நாளில் "உரிமை மீட்க, தலைமுறை காக்க" நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.

ராமதாஸ் எதிர்ப்பையும் மீரி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை. வட தமிழகத்தில் 100 நாட்களுக்கான நடைபயணத்தை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு தனது முதல் நாள் வெற்றி பயணத்தை தொடங்கிய அன்புமணிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.