×

3வது முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகும் அன்புமணி

 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை எம்பி இடத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். இதனையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் பாமக தலைவர் அன்புமணி.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் மிக மிக மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் களம் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. 98% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பொய் கூறுகிறார். 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.