×

நீட் தேர்வில் தாலியை கழற்ற சொன்னவர்கள் இப்போது மட்டும் மதம் சார்ந்து ஆதரிக்கிறோம் என சொல்வது ஏன்?- அன்பில் மகேஸ்

 

நீட் தேர்வில் தாலியை கழற்ற சொன்னவர்கள், இப்போது மட்டும் மதம் சார்ந்து ஆதரிக்கிறோம் என சொல்வது ஏன்..? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு முற்போக்கு கருத்துக்களை கூற வேண்டும். மத அடையாளங்களுடன் வர வேண்டும் என கூறுவதை பின்போக்குத் தனம் என கூறினேன். மத நம்பிக்கையில் யாரும் தலையிடப்போவது இல்லை ஆனால், அதை கட்டாயப்படுத்தக் கூடாது. மதம் சார்ந்து நிற்கிறோம் என கூறும் இவர்கள் நீட் தேர்வின் போது தாளியை கூட கழற்றி வைக்க கூறுகிறார்கள், அங்கொன்றும், இங்கொன்றும் பேசக் கூடாது என்பது எனது கருத்து

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு வழங்கிய, ஒன்றிய அரசின் பங்கான ரூ.600 கோடியை கூட ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை, குழந்தைகள் விஷயத்தில் அரசியல் பார்ப்பது வருத்தமளிக்கிறது. பள்ளி கல்வி துறை ஒவ்வொரு பள்ளிக்கான ரிப்போர்ட் கார்டை கொடுத்துள்ளோம்.  தமிழகம் முழுவதும் 9.80 லட்சம் மாணவர்களிடம் கற்றல் திறன் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தாண்டி புரிந்து படித்துள்ளார்களா? என்பதை அறிந்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 850 ஆய்வகங்கள் சீரமைக்க நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.  அதிநவீன ஆய்வகம் அமைப்பதற்கான ஒப்பந்த கோரும் நடவடிக்கைகளை நிதி துறை கவனித்து வருகிறது” என்றார்.