×

“டார்கெட் நீங்க இல்லைங்க... என்று அன்பிலை மிரட்டும் போலீஸ்”

 

வரும் 18 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்து விட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்கு செல்வேன் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்துள்ளார்.

8 மணிநேர சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், “காலை 7 மணியளவில் அதிகாரிகள் இல்லத்தில் நுழைந்தபோதில் இருந்து முடியும் வரை முழு ஒத்துழைப்பு தரப்பட்டது. 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறி சென்றனர். காவல்துறைக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விசாரிக்கும்போது முறையாக விசாரிக்க வேண்டும். ஆனால் அதைவிட்டு, விசாரணை என்ற பெயரில் “டார்கெட் நீங்க இல்லைங்க... டார்கெட் அவருதான்.. அவர் பெயரை மட்டும் சொல்லுங்க... விட்டுருதோம்.." என்றெல்லாம் மிரட்டாதீர்கள். ஹிட்லர் முதலமைச்சர், கோயபல்ஸ் அமைச்சர்கள் என பேசியதால் என் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது” என்றார்.