பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆனந்தி..! எலிமினேஷனுக்கு பின்னால் இருக்கும் சோக காரணம்!
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்தவர் நடிகை ஆனந்தி.
இந்த சீசனில் புதுவிதமாக, வீட்டின் கேப்டனாக இருப்பவர், டாஸ்கில் சரியாக பர்ஃபார்ம் செய்யாத மூவரை தேர்வு செய்வார். அவர்களில் யார் வெளியேற வேண்டும் என சக போட்டியாளர்கள் ஓட்டிங் செய்து, அதில் யாருக்கு அதிக வாக்குகள் வருகிறதோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். அப்படி சாவின்யா, ஜாவித் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், லட்சுமி பிரியா இந்த வாரம் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதியில் எந்த எலிமினேஷனும் இருக்காது என்று மக்கள் நினைத்திருந்தனர். இந்நிலையில் நடிகை ஆனந்தியின் தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.
முன்னதாக இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் பிக்பாஸ் செட்டில் தொடங்கிய நிலையில் அதில் கலந்து கொண்ட ஆனந்தி ஏற்கனவே மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகி இருந்தது. இதற்கிடையில் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே ஆனந்தியின் வீட்டிலிருந்து பிக்பாஸ் யூனிட்டுக்கு அவரது தந்தை இறந்தது குறித்த தகவல் வர, தகவலை அங்கு ஆனந்தியிடம் சொல்லாமலேயே அவரை நிகழ்ச்சியிலிருந்து அவசரமாக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.