×

15,000 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவிக்கும் மூதாட்டி! தீக்குளிக்க போவதாக வேதனை

 

கோவையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போராடுகிறார் 78 வயது மூதாட்டி.

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி (78 ) என்பவர் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தார் . அப்போது அவர்  கூறுகையில் என் மகன் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார் . கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார் . சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்த போது அவர் வைத்திருந்த பேக்கில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

ஒன்றிய அரசு செல்லாது என அறிவித்த இந்த ரூபாய் நோட்டுகள் 15 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை மாற்றி தரும்படி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நான்கு முறை புகார் மனு அளித்தேன், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பணத்தை மாற்றி தர முடியாது என கூறிவிட்டார்கள். என் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனது ஒரே வாரிசான மகனும் இறந்து விட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் எனக்கு இந்த பணத்தை மாற்றி கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார். பணத்தை திரும்ப பெற உடனடியாக அறிவிப்பை வெளியிட்ட மோடி, எம்மை போன்றோருக்கு உதவ பழைய நோட்டுகளை திரும்ப பெற அறிவிப்பு வெளியிட வலியுறுத்தினார். பழைய ரூபாய் நோட்டை எரிக்க எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி, பழைய நோட்டுகளை மாற்ற உதவி கிடைக்கவில்லை என்றால் தீக்குளிக்க போவதாக மூதாட்டி மன குமுறலை வெளிப்படுத்தினார்.