×

தவெக அரசுக்கு விரைவில் முடிவுரை- உதயநிதி ஸ்டாலின்

 

நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம் காங்கிரஸ் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தவெக அரசின் முகத்திரையை கிழிப்பாா்கள், முடிவுரை எழுதுவாா்கள். ரீல்ஸ் போட்டவா்கள் செய்தி பாா்க்கிறாா்கள் என முதல்வா் கூறினார். மக்கள் சட்டமன்றத்தை தொடா்ந்து கவனிப்பாா்கள், இந்த மாற்றமும் விழிப்புணா்வும் தான் தவெகவின் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது. மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம் காங்கிரஸ். எமர்ஜென்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது எங்கள் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று மக்களுடன் நின்றது திமுக. பயம் என்பது திமுகவிற்கு கிடையாது, எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் மீண்டும் எழுந்து வருவோம்” என்றார்.