×

10 திருக்குறள் சொன்னால் ஒரு இயர் போன் இலவசம் : அலைமோதிய கூட்டம்!!

திருக்குறள் சொன்னால் இயர் போன் இலவசம் என்ற அறிவிப்பால் செல்போன் கடையில் மாணவ, மாணவியர்கள் குவிந்த சம்பவம் கரூரில் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனை வழங்கி வருவதாக கேள்விபட்டுள்ளோம்.கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் சொன்னால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழலில் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க்கில் 10 திருக்குறள்
 

திருக்குறள் சொன்னால் இயர் போன் இலவசம் என்ற அறிவிப்பால் செல்போன் கடையில் மாணவ, மாணவியர்கள் குவிந்த சம்பவம் கரூரில் நடைபெற்றது.

இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனை வழங்கி வருவதாக கேள்விபட்டுள்ளோம்.
கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் சொன்னால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சமீபகாலமாக பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழலில் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க்கில் 10 திருக்குறள் ஒப்புவித்தால் 1/2 லிட்டர் பெட்ரோல், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இப்படி தமிழ் மீது பற்றுள்ளவர்கள் தமிழை வளர்க்கும் முயற்சியில் பல நூதன அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் செங்குந்தபுரத்தில் ஸ்ரீயா மொபைல் கடை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 10 திருக்குறள் சொல்பவர்களுக்கு இயர் போன் மற்றும் மாஸ்க் இலவசம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் திருக்குறளை சொல்லி இயர் போனை இலவசமாக பெற்று சென்றனர்.கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வெற்றிபெற்றவர்களுக்கு இயர் போன் மற்றும் மாஸ்க்கை இலவசமாக அளித்தார். மேலை.பழநியப்பன், திருக்குறள் பேரவை அலுவலகத்திற்கு வந்து திருக்குறள் சொல்லும் மாணவ மாணவிகளை பாராட்டி, பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.