×

அக்கா உடன் பைக்கில் சென்ற 8 வயது சிறுமி.. எமனாக வந்த குப்பை லாரி! தலை நசுங்கிய கோரம்

 

சென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த 8 வயது சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த குப்பை லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் வசித்து வருபவர் சரளா இவருடைய 8 வயது மகள் காவியா தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரளாவின் உறவுக்கார பெண்ணின் மகள் 15 வயது சிறுமி, அடிக்கு மாடி குடியிருப்பில் இருந்த ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் கேஸ் சிலிண்டர் வைத்துக்கொண்டு சிறுமி காவியாவை பின்னால் அமர வைத்து ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது கேஸ் சிலிண்டர் கீழே விழுந்ததால் அதனை பிடிக்க இருசக்கர வாகனத்தை நிறுத்திய பொழுது, பின்னால் அமர்ந்திருந்த சிறுமி காவியா நிலை தருமாறு வலது பக்கம் விழுந்ததால் அவ்வழியாக பின்னால் வந்த குப்பை லாரி பின்சக்கரம் காவியாவின் தலைப்பகுதியில் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைப் பார்த்த பொதுமக்கள் லாரி ஓட்டுனர் சரன் ராஜை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் பொதுமக்களிடமிருந்து லாரி ஓட்டுனரை மீட்டு தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து காவியாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் போக்குவரத்து  இணை ஆணையர் சோனல் சந்ரா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார் .இச்சம்பவம் தொடர்பாக  தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குப்பை லாரி பின் சக்கரம் ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி உயிர்ழந்த சம்பவம் உறவினர்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.