×

ஆவினுடன் நாங்கள் போட்டியிடவில்லை - அமுல் 

 

ஆவினுக்கு எதிரானது அல்ல அமுல், ஆவினுடன் நாங்கள் ஒன்றும் போட்டியிடவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


அமுல் நிறுவனத்தின் தமிழக ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 சதவீதம் ஆவினுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. ஆவினைவிட கூடுதலாக கொள்முதல் விலை கொடுக்க மாட்டோம். அமுல் வெளிப்படை தன்மையுடன் செயல்படும். 10 நாட்களுக்கு ஒரு முறை பால் கொள்முதல் பணம் வழங்கும். இடைத்தர்கர்கள் மூலமாக பால் வாங்க மாட்டோம். ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை. ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது. 

ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையான என்ன நிர்ணயம் செய்துள்ளதோ, அதே விலைக்கு மட்டுமே அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும். ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் பால் வழங்குவரும் நபர்கள் அமுல் நிறுவனத்துக்கு பால் வழங்க வேண்டும் என்றால், ஆவின் நிறுவனத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.