×

திருச்சி- ரயிலில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள். போலீஸ் ஒத்திகையால் பரபரப்பு

திருச்சி : 03.09.20 தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாத காலமாக ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முடங்கியது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் மட்டும் அவ்வப்போது இயக்கப்பட்டது. சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது, மேலும் அரசு ஊழியர்களுக்கான ஒரு சில இடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு அரசு ஊழியர்கள் வந்து செல்ல வசதியாக தஞ்சாவூரில் இருந்து ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது, இந்த ரயில்
 

திருச்சி : 03.09.20

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாத காலமாக ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முடங்கியது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் மட்டும் அவ்வப்போது இயக்கப்பட்டது. சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது, மேலும் அரசு ஊழியர்களுக்கான ஒரு சில இடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பெட்டிக்குள் சோதனை

இந்நிலையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு அரசு ஊழியர்கள் வந்து செல்ல வசதியாக தஞ்சாவூரில் இருந்து ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது, இந்த ரயில் தஞ்சாவூரில் காலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.00 மணிக்கு வந்தடையும், வழக்கம்போல் இன்று அந்த ரயில் 130க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் உடன் வந்தது. திருச்சி ஜங்ஷன் ரயில்

திருச்சி ஜங்ஷன் ரயில்

நிலையம் இரண்டாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது, இதையடுத்து பயணிகள் கீழே இறங்கியபோது திடீரென 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் அந்த ரயிலுக்குள் ஏறினர், மேலும் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்களும் வந்தனர். அவர்கள் ரயில் பெட்டிக்குள் சென்று சோதனையிட்டனர் மேலும் கைரேகை நிபுணர்களும் சோதனை செய்தனர், இச்சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்பட்டது.

மோப்ப நாய்

பின்னர் ரயிலின் இரண்டாவது பெட்டியில் மோப்ப நாய் சிறிய பை ஒன்றை கவ்விப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடியது அந்த பையினுள் வெடிபொருட்கள் இருந்துள்ளது. இதை கண்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில்

அரசு ஊழியர்களிடம் ஆபத்துக் காலத்தில் உங்களை நீங்கள் எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதற்காகவே நடத்தப்பட்ட ஒத்திகை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர், அதைத்தொடர்ந்து அச்சம் விலகி அரசு ஊழியர்கள் அங்கிருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.