×

அம்மோனியா வாயு கசிவு - சட்டமன்றத்தில் அமைச்சர் விளக்கம்..!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயுக் கசிவு காரணமாக பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பர்வேஸ் 110 விதியின் கீழ் விளக்கமளித்தார். 

அமோனியா வாயுக் கசிவு விபத்தில் 70 பெண்கள் 4 ஆண்கள் என 74 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் அரசு மருத்துவமனையிலும் 27 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். 27 நபர்கள் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது உடல்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி அரசே நல்லடக்கம் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.  

சட்டமன்றத்தில் அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக 110 விதிகளின் கீழ் அமைச்சர் பர்வேஸ் விளக்கமளித்தார். இதையடுத்து தங்களை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் விளக்கம் அளித்த பின் விவாதம் கிடையாது என்றும் தங்களுக்கான நேரம் வரும் போது உறுப்பினர் தங்கள் பிரச்சனைகளை எழுப்பலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

#Watch | அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம் #SunNews | #TNAssembly | #AmmoniaGasLeak pic.twitter.com/7bLaa3GSPD

— Sun News (@sunnewstamil) June 22, 2026