×

அமோனியா கசிவு- வாய், மூக்கில் ரத்தம்... துடிதுடித்து பலியான 8 பேர் ! விஜய் அதிரடி உத்தரவு

 

அமோனியா கசிவு விவகாரத்தில் உடனடியாக அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டும் என்ற முதல்வர் விஜய் உத்தரவை ஏற்று மருத்துவமனைகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மேலும் 63 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை காணச் சென்ற அமைச்சர் குமார் கண்கலங்கினார்.


வாயு கசிவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் விஜய் வேதனை தெரிவித்ததாக கூறிய அமைச்சர் குமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்கள் வடமாநில தொழிலாளர்கள் எனவும் தெரிவித்தார். இதனிடையே திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து விசாரிக்க ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கையும் மூன்று நாட்களில் முழுமையான அறிக்கையும் தாக்கல் செய்ய தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.