×

அமோனியா வாயு கசிவு- பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

 

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் இறால் ஆலையில் அமோனியா வாயு கசிந்த விவகாரத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 8- ஆக உயர்ந்துள்ளது.  வாயு கசிவால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதா (23) என்பவர் உயிரிழந்தார். சீதா ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவராவார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. தனியார் இறால் பதப்படுத்தப்படும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா   கசிவு விவகாரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய 147 தொழிலாளர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை செயப்பட்டுகிறது.