×

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்- நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

 

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்  நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.