"அதிமுக ஆட்சி அமைக்க திமுகவிடம் பேசவில்லை; விஜயிடம் ஆதரவு கேட்க திட்டமிட்டிருந்தோம்" - டிடிவி தினகரன்
தாராபுரத்தில் சத்தியபாமாவை அழ விட்டிருக்கிறார், அடுத்து மதுராந்தகம் வேட்பாளரை அழ விட்டாலும் விடுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்கப் பேசியதாகக் கூறுவது தவறு. திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க நினைத்தது என்பதில் உண்மை இல்லை. ஆகவே திமுகவிடம் பேசியதாக யார் சொன்னாலும் அது தவறு. அதிமுக ஆட்சி அமைக்க, இன்றைய முதலமைச்சர் விஜய்யிடம் தான் ஆதரவு கேட்கலாம் என்று இருந்தோம். அது முடியாமல் போனதால் தான் திருமாவளவனை முதல்வராக்க அதிமுக உட்பட அனைத்து கட்சியினரும் முயன்றோம். தாராபுரத்தில் சத்தியபாமாவை அழ விட்டிருக்கிறார், அடுத்து மதுராந்தகம் வேட்பாளரை அழ விட்டாலும் விடுவார். முன்னாள் MLAக்களையும் நடிப்புக்கு தயார் பண்ணறாரு?
ரீல்ஸ் மூலம் ஆட்சியை பிடித்த தவெக கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தவெக ஆட்சியில் மின்வெட்டு மட்டுமே வெற்றிகரமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், அம்மா உணவகங்களைச் சீரமைக்கவும், மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், தான் பிறப்பித்த உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை என்றாவது ஆய்வு செய்திருக்கிறாரா? அல்லது அதிகாரிகளிடம் தான் கேட்டறிந்திருக்கிறாரா? 630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக முதலமைச்சர் சொன்ன பொய் அடுத்த நாளே அம்பலம்” என்றார்.