தவெகவை வீழ்த்த திமுக- அதிமுக இணைவதில் தவறில்லை: டிடிவி தினகரன் பரபரப்பு
தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசியல் சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அண்ணா, ராஜாஜி ஒன்று சேர்ந்துள்ளனர். இதுபோல பல உதாரணங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றவர்கள் தவெக அரசில் அங்கம் வகிக்கின்றனர். அப்படியானால் எந்த கூட்டணியும் நியாயம் தான். சூழல்தான் முடிவு செய்யும். தவெகவை வீழ்த்த திமுக- அதிமுக இணைந்து வியூகம் வகுப்பது தவறில்லை. திமுக கூட்டணியில் வென்றவர்களை அழைத்து தவெக அரசில் அமைச்சர் பதவி கொடுத்தது நியாயம் என்றால் இதுவும் நியாயம்தான். அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்றிணைக்கும். ஆதரவு கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் தவெக குதிரை பேரம் நடத்துவதாக கருத்து தெரிவித்தால் கோவம் அடைகிறார்கள்.
கரூரில் துக்கத்திற்காக கருப்பு சட்டை அணிந்து வந்த முதலமைச்சரின் உடல் மொழியில் எந்த துக்கமும் வெளிப்படவில்லை. குருட்டு யோகம், சினிமா மோகத்தை வைத்துதான் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். அதிமுகவின் 6 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது ஊழல் தான். களவாணிதனம் தான் . ” என்றார்.