×

"ஓபிஎஸ் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்”- டிடிவி தினகரன்

 

ராஜ்யசபா தேர்தலில் தான் போட்டியிடவில்லை, சட்டசபை தேர்தலிலும் போட்டியிடவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை, பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறேன். ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஐயப்பன் சட்டசபையில் திமுக அரசை புகழ்ந்து பேசுகிறார். துரியோதனன் கூட்டத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாக செயல்பட்டதை நாடே கவனித்து வருகிறது. 2015ல் ஓபிஎஸ் அவர்களே பதவியில் இருந்து நீக்கியது சரியானது என இப்போது தெரிகிறது.

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தர்மத்தின் பக்கம் இருக்க வேண்டும். அதர்மத்தின் பக்கம் சென்றால் அழிய வேண்டியதுதான். திமுக 5000 கொடுத்தாலும் 50 ஆயிரம் கொடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அம்மாவின் விசுவாசிகள் 99 சதவீதம் பேர் தற்போது ஓரணியில் இருக்கின்றனர். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது அவர்களது விருப்பம், இதில் கருத்து கூற நான் விரும்பவில்லை. நடைபெறக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில்  பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்” என்றார்.