“அமித்ஷா என்னை அழைக்க மாட்டார்... நான் அவரை சந்திக்கவும் மாட்டேன்”- டிடிவி தினகரன்
மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலே, திருவிழாக்களின் பெயராலே யாரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் ஜாதி, மதங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதே அமமுகவின் நிலைபாடு. மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலே, திருவிழாக்களின் பெயராலே யாரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
அமித்ஷாவை நான் சந்திக்கும் வாய்ப்புகள் உறுதியாக இல்லை. அவர்களும் என்னை அழைக்க மாட்டார்கள். நானும் சந்திக்க மாட்டேன். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை NDA-வில் அமமுக இணையாது. இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக இருக்கிறது.அதிமுகவை அமித்ஷா இயக்குகிறாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அமமுகவை அம்மா தொண்டர்கள்தான் இயக்குகிறார்கள்” என்றார்.