×

விஜயகாந்தை போல் 2026 தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டிடிவி தினகரன்

 

2006 தேர்தலின் போது மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போல, 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது மற்ற கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “2006 தேர்தலின் போது மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போல, 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது மற்ற கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை நான் கூறுவதால் அவர்களுடன் கூட்டணிக்கு செல்வேன் என்று அர்த்தம் இல்லை. 

2006 சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்த் தனியாகப் போட்டியிட்டாலும், அவர் பெரும் வாக்குகளைப் பிரித்து, அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுபோல், நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தால், 2026 தேர்தலில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவார். விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால், அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்புதான். குறிப்பாக, ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் ஆற்றல் விஜய்க்கு உண்டு”என்றார்.