×

"கூட்டணி ஆட்சிதான்... தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்" - டிடிவி தினகரன்

 

கூட்டணி மந்திரிசபை என்பதை தான் NDA ஆட்சி என அமித்ஷா கூறினார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அமமுக நீட்டிக்கிறது. கூட்டணி மந்திரிசபை என்பதை தான், தமிழகத்தில் NDA கூட்டணி  ஆட்சி என அமித்ஷா கூறினார். NDA கூட்டணி  ஆட்சி என்பதற்கு கூட்டணி மந்திரிசபை என்பதுதான் பொருள். முதலமைச்சர் யாரென்று கூட்டணி சேர்ந்து முடிவு செய்வார்கள். தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்றார்.