“அதிமுகவில் உள்ள 90% பேரின் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார்”- டிடிவி தினகரன்
அதிமுக பலவீனமாகி வருவதால் அங்கு உள்ள 90% தொண்டர்கள் நிர்வாகிகள் அதிமுக பலம் பெற வேண்டும் அங்கு உள்ள மூத்த நிர்வாகிகள் அந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் பள்ளி மாணவர்கள் சிலம்பு சுற்றியும் இயந்திரம் மூலம் காகிதங்களை தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அதிமுக பலவீனமாகி வருவதால் அங்கு உள்ள 90% தொண்டர்கள் நிர்வாகிகள் அதிமுக பலம் பெற வேண்டும் அங்கு உள்ள மூத்த நிர்வாகிகள் அந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தொண்டர்களின் வெளிப்பாடுதான் செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன். நாகரிகம் அநாகரீகம் பற்றி செங்கோட்டையனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர் எப்போதும் அமைதியாக இருப்பவர். அவர் அரசியல் வாழ்க்கையில் எந்தவித சர்ச்சையிலும் ஈடுபடாதவர். இன்று அவர் எதிரணியில் இருந்தாலும் உண்மையை உண்மை என்று தானே கூற முடியும்.
ஜெயலலிதா 2016ல் விட்டுச்சென்ற ஆட்சியில் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். ஜெயலலிதா அமைச்சராக இருக்கும் பொழுது அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதற்கட்ட நிதியை ஒதுக்கினார். அதற்குப் பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆன பிறகு கூடுதல் நிதியை ஒதுக்கி அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான் பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தும் பொழுது ஜெயலலிதா படம் இடம்பெறாமல் இருந்தது ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவருக்கும் எங்கிருந்தாலும் வருத்தமாகத்தான் இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பதவியில் முதலமைச்சர் ஆகியவர்களுக்கு துரோகம் ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம். நான்கரை ஆண்டுகள் ஆட்சி தொடர பாஜக ஆட்சி உறுதுணையாக இருந்தது அவர்களுக்கு துரோகம். இப்படி எல்லாம் சென்று ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்தது என்று சொல்லும் கதையாக கிளைச் செயலராக இருந்து வந்தேன், தொண்டராக இருந்து வந்தேன், 89ல் சட்டமன்ற உறுப்பினர் என்றெல்லாம் கூறுகிறார். அதற்கெல்லாம் காரணமாக இருந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா படம் இல்லாத போது எப்படி ஏற்றுக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்? விளம்பரத்திற்கு அடிமையாகி விட்டாரா? ஏற்கனவே முதலமைச்சர் பதவியில் இருந்ததால் பணத் திமரால் இன்று இரட்டை இலையை பறித்து வைத்துள்ள திமிரினால் அவர் இதுபோன்று செயல்படுகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.