☰
×

அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் முதலமைச்சரின் பிரச்சாரத்திற்கு வருகை

 

தாராபுரத்தில் த.வெ.க வேட்பாளர்  சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சித்  தலைவர் விஜய் செய்யும் பிரச்சாரக் கூட்டத்தில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் கலந்துகொண்டார். 


மன்னார்குடி அமமுக சட்டமன்ற உறுப்பினரான எஸ்.காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மே 2026-ல் நீக்கப்பட்டார். கட்சி உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, காமராஜரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தான் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என காமராஜ் தரப்பில் விளக்கங்களும் பேட்டிகளும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் மன்னார்குடியில் திமுக முன்னாள் தொழில் அமைச்சரும் திமுக ஐடி விங் தலைவருமான டிஆர்பி ராஜாவை படுதோல்வி அடைய செய்த அமமுக எம்.எல்.ஏ காமராஜ் இன்று முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்ற தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வந்து அமர்ந்து இருக்கிறார்.