தஞ்சாவூரில் ஜனவரி 5ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம்! - டிடிவி தினகரன் அறிவிப்பு..!
Dec 18, 2025, 10:46 IST
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கழகத்தின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.
அனைத்து உறுப்பினர்களும் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.