அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி- அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் மயக்கம்
Aug 9, 2026, 10:52 IST
புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற, குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து காவலர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மயக்கம் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் ஸ்டெர்க்சர் மூலமாக தூக்கி சென்று சிகிச்சை அளித்தனர். வெயிலால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு பதிலாக மாற்று காவலர்கள் அணி வகுப்பில் நின்றனர்.