தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!
Updated: Dec 12, 2025, 11:12 IST
தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
மேலும் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.