“ஜனநாயகத்திற்காக போராடும்போது ஜனநாயகனை காப்பாற்ற ஒரு கூட்டம்”- அமீர்
ஜனநாயகத்தை காக்க இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அங்கே ஜனநாயகனை காக்க ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய இயக்குநர் அமீர், “இது மிக முக்கியமான நாள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு சிறு கூட்டம் போராடிக் கொண்டிருக்கக் கூடிய சூழலில், ஜனநாயகனைக் காப்பாற்ற ஒரு பெருங்கூட்டம் போராடிக் கொண்டு இருக்கிறது. அந்த கூட்டம் இதைவிட பெரிதாக இருக்கலாம். ஆனால் இந்த கூட்டம் அவர்களை விட அறிவார்ந்த கூட்டம். இங்கேயே நாளைக்கு போராட்டம் வலுப்பெறும் சூழல் வரும்.. உங்கள் அதிகாரிகள் அடிக்க சொன்னா அடிக்காதீங்க.. மாணவர்களை எதுக்கு அடிக்குறீங்க..? உங்களால் ஒரு அரசியல் வாதியை அடிக்க முடியுமா..?போராடுவது ஜனநாயக உரிமை. நாங்கள் நல்லவர்களுக்கு நல்லவர்கள். போராட்டக் களத்தில் போராடுபவர்கள். எங்களை விட யாருமில்லை...
நீட்டை கொண்டு வராம பார்த்துக்கிறோம், எங்கிட்ட அதுக்கான ரகசியம் இருக்குனு சிலர் சொல்வாங்க. அவங்களும் கொண்டு வரமாட்டாங்க. அவங்களும் ஆண்டு முடிச்சிட்டு போயிடுவாங்க. கடைசி வரை அந்த ரகசியத்தை சொல்லமாட்டாங்க. அனிதா மரணத்திற்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க வீட்டிற்கு சென்றவர்களும் அதிகாரத்தில் இருப்பாங்க அவங்களும் சொல்லமாட்டாங்க. இந்த கட்சிகள் எதுவும் செய்யமாட்டாங்க” என்றார்.