×

ஆம்புலன்ஸ் வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்

 

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய தவெக நிர்வாகிகள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடம் உள்ளது.முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை யொட்டி அங்கு குவிந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது பச்சிளம் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் நுழைய முடியாமல் பல மணிநேரம் காத்திருந்தது. பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வில் தவெகவினர் ஆர்வம் காட்டினர். பெற்றோர் கதறியும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் அலட்சியப்படுத்தியதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின் பல மணிநேரத்திற்கு பின் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின் ஆம்புலன்ஸ் உள் நுழைந்தது.