×

விராலிமலையில் கூண்டோடு திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பி. ஐயப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கம் பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பி. ஐயப்பன் முன்னிலையில் இன்று முதல் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். புதிய தொண்டர்களை வரவேற்ற ஒன்றிய செயலாளர் ஐயப்பன் அவர்களுக்கு வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கி திமுக கட்சி கரை பதித்த வேட்டி போர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்தார்.