அல்லு அர்ஜூன் சர்ச்சை "ஆதாரமற்றவை"
நடிகர் அல்லு அர்ஜூனை நேரில் பார்க்கும்போது அவருடன் கை குலுக்கக்கூடாது. அவரை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது உள்ளிட்ட 42 கண்டிஷன்கள் போடப்பட்டதாக காவேரி பருவா என்ற பெண் பிராண்ட் மேனஜர் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன் தரப்பு, தவறான தகவலை பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தன்னை சந்திக்க 42 கடும் ரூல்ஸை பின்பற்ற வேண்டும் என காவேரி என்பவர் பேசியது "ஆதாரமற்றவை" எனவும் அல்லு அர்ஜுன் அலுவலகம் தரப்பில் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நடிகர் அல்லு அர்ஜுன் பற்றிய கருத்துக்கள் ஆதாரமற்றவை. உண்மைக்குப் புறம்பானவை. அவர் மிகுந்த கண்ணியத்துடன் நடப்பவர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது