×


அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு

 

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2006-2011 காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கனிமவளத்துறை கூடுதல் பொறுப்பை கவனித்தார்; 1.7 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது; 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவரது பதவி தப்பாது.
 

இந்நிலையில் பொன்முடி பதவி வகித்த உயர்கல்வி துறையை ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்.  பிற்படுத்தப்பட்டோர் நலன், கதர் கிராம தொழில்கள் துறையுடன் உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை கூடுதலாக ராஜ கண்ணப்பன் கவனிப்பார். சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக  அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.