×

புதுவையில் என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி உறுதி? புதுச்சேரி அரசை விமர்சிக்காத விஜய்..!

 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (டிச., 09) புதுச்சேரி பிரச்சாரத்தில் மத்திய பாஜக அரசையும், தமிழ்நாட்டில் திமுகவையும் விமர்சித்த தவெக தலைவர் விஜய், புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காமல், முதல்வர் ரங்கசாமியை பாராட்டியுள்ளார். விஜய்யின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நல்ல நட்பு தொடரும் நிலையில், விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.