×

#BREAKING ஸ்கூல் லீவ்லாம் இல்ல.. நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்

 

சென்னையில் நாளை (ஜன.10) அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

மழையால் கடந்த மாதம் 3 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. டிச.3 விடுமுறையை ஈடுசெய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும் என்றும், வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி  நாளை முழு பணி நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகள் நாளை செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.