×

#BREAKING "வணிக சிலிண்டர்களுக்கான அனைத்து விநியோக கட்டுப்பாடுகளும் நீக்கம்" - மத்திய அரசு

 

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலைமை முழுமையாக சீரடைந்ததாகவும் கூறியுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் நெருக்கடியின் காரணமாக, LPG விநியோகம்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,237.50-க்கும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.928க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிலிண்டர் பதுக்கலைத் தடுக்கும் நோக்கத்தோடு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முன்னெடுப்பு விநியோகக் கொள்கை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தியது.

இந்ந்லையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலைமை முழுமையாக சீரடைந்ததாகவும் கூறியுள்ளது. வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கான Bulk LPG விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதை 50% அளவுக்கு தளர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு LPG உற்பத்தி மற்றும் இறக்குமதி சீராக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.