ராம நவமியை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை..!
Apr 16, 2024, 14:36 IST
ராம நவமி என்பது பெருமாளின் அவதாரமான ராமர் பிறந்த நாளை கொண்டாட கூடிய ஒரு பண்டிகை ஆகும். இத்தினமானது ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் 9ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் இவ்வாண்டுக்கான ராம நவமியானது ஆங்கில நாட்காட்டியின் படி, வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
எனவே தெலுங்கானா அரசானது ஏப்ரல் 17 அன்று அரசு விடுமுறையை வழங்கியுள்ளது. இந்த அரசு விடுமுறையானது அரசு அலுவலங்களுக்கு மட்டுமல்லாது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்வுடன் உள்ளார்கள்.