இன்று நடக்கவிருந்த முதல்வர் விஜயின் திருச்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து..!
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவு காரணமாக முதல்வர் விஜயின் திருச்சி பயணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய், நாளை அதாவது இன்று திருச்சி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அங்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 134 கோடி ரூபாயில் கட்டப்பட்ட விரிவான மருத்துவ சிகிச்சை கட்டடத்தை திறந்து வைக்க இருந்தார். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்பட்டு வரும் அரசு ஓட்டலுக்கு சென்று, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார். மேலும், திருச்சி மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிட்டிருந்தார்.திருச்சி விமான நிலையத்தில் இருந்து புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும்போதும், அரசு மருத்துவமனையில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடமான தமிழ்நாடு ஓட்டலுக்கு செல்லும்போதும் முதலமைச்சர் விஜய் சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், தவெகவைச் சேர்ந்த கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவு காரணமாக முதல்வர் விஜய்யின் திருச்சி பயணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.