×

8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் இன்று முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட்,
 

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் இன்று முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் பொதுமக்களுக்காக அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளது. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் விரைவில் திறக்கப்படும் என்ற செய்தியால் அனைத்து தரப்பினரும் சந்தோஷத்தில் உள்ளனர்.


மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மால்கள், ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் வைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது. அன்னதானம் வழங்கும்போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும். அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் முதியோர் கர்ப்பிணிகளுக்கு தடை” எனக் குறிப்பிட்டுள்ளது.