×

அனைத்து பொறியியல் மற்றும்  கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இன்று  விடுமுறை..

 

தமிழகத்தில் இன்று அனைத்து பொறியியல்  மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு   விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.  

எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்இ/ எம்.டெக்/ எம்.ஆர்க்/ எம்.பிளான் போன்ற முதுநிலை  படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வே டான்செட் தேர்வாகும்.  அண்ணா பல்கலைக்கழகம் இந்த பொது நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்தவகையில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு இன்றும் ( மே 14 - சனிக்கிழமை ), நாளையும் ( ஞாயிறு ) நடைபெறுகிறது.   

முதல் நாளான இன்று எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், இரண்டாம் நாளான நாளஒ  எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ர  படிப்புகளுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.  இதற்காக சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 37 ஆயிரம் மாணவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர்.  தேர்வுக்கான ஹால் டிக்கெட்டும் நேற்று முன்தினம் அண்ணா  பல்கலைக்கழகத்தின் டான்செட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளிடப்பட்டிருந்தன.  

 இந்த தேர்வில்  மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக இன்று  அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும்   விடுமுறை அளிக்கப்படுவதாக  உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பை நேற்று முன்தினம்  வெளியிட்டிருந்தார்.