×

“முக்தார், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே அவர்களை ஏதாவது செய்வேன்”- அலிஷா அப்துல்லா

 

யூடியூப் சேனலில் முக்தர் மற்றும் திருச்சி சூர்யா தன்னை குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா சென்னை காவ ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அலிஷா அப்துல்லா, “முக்தார், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே அவர்களை ஏதாவது செய்வேன். காப்பாத்துங்கணு EX CM வீட்டுக்கு போவாங்க.. உங்களுக்கு அம்மா, தங்கச்சி இல்லையா.. பெண்களை பத்தி மட்டும் தான் பேசுவார்.. திருச்சி சூர்யா, முக்தார் இரண்டு பேரையும் உள்ள தூக்கி போடுங்க... அவங்கள விடமாட்டேன்...  என்ன பத்தி ஆபாசமா பேசிருக்காங்க.. என் குழந்தைங்களை அண்ணாமலை போட்டோவோட கொச்சையா பேசிருக்காங்க..  எதுக்கு அண்ணாமலை சார இழுக்கணும்? தி.மு.க ஆதரவால் தான் முக்தர் இப்படி அவதூறு பரப்புறாரு.. ரெண்டு நாளைக்கு முன்னால ஸ்டாலினை போய் பாத்திருக்காரு.. அப்போ யாரு சப்போர்ட் பண்றா?" எனக் கேள்வி எழுப்பினார்.