×

மதுபிரியர்கள் ஷாக்..! நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..!  

 

டாஸ்மாக் நிறுவனம் மூலம் சாதாரண நாட்களில் 100 கோடிக்கு மேல் மதுவிற்பனை நடைபெறுகிறது. அதிலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விஷேச நாட்களில் 750 கோடிக்கு மேல் மதுவிற்பனை நடைபெறும். இதன்மூலம் தமிழக அரசுக்கு வருவாய் அதிக அளவில் கிடைக்கிறது.


இந்த நிலையில், வருடத்தின் முக்கிய நாட்களில் மது கடைகள் மற்றும் அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வரும் பார்கள், பப்புகள் மூடப்படுவது வழக்கம். அதாவது, குடியரசு தினம் , சுதந்திர தினம், அக்டோபர் 2, வள்ளலார் தினம் , தொழிலாளர் தினம் உள்ளிட்ட நாட்களில் மூடப்படும்.குறிப்பாக இந்த நாட்களில் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படாத வகையில் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபர் 2, 2025 அன்று (வியாழக்கிழமை) உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்று டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.