×

மதுபிரியர்கள் ஷாக்..! நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் விடுமுறை..! 

 

டாஸ்மாக் கடைகள் பண்டிகை நாட்களில் கூட விடுமுறை இல்லாமல் வருடத்தின் அனைத்து நாட்களும் திறந்திருக்கும் அதே நேரம் குறிப்பிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில்,ஜனவரி 15: திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி  மாதம் வள்ளலார் நினைவு நாள், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 உள்ளிட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நபிகள் நாயகம் பிறந்தநாளான  மிலாது நபி தினத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிற புதன் கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

அதில், நாளை 26.08.2025 புதன்கிழமை அன்று மிலாது நபி முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் உள்ளிட்ட  அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்.

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் விதிகளின்படி கடுமையான எடுக்கப்படும் என நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.